ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் |

கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பிரேமலு'. இப்படம் தெலுங்கு, தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
ஒரு சுவாரசியமான காதல் கதையாக வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. முதல் பாகம் ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு நாளில் வெளியானது. ஆனால், இரண்டாம் பாகத்தை ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
முதல் பாகத்தில் படத்தின் கதாநாயகன் நஸ்லன் இங்கிலாந்திற்கு படிக்கச் செல்வதுடன் முடிந்தது. இரண்டாம் பாகத்தில் நஸ்லன், மமிதா காதலர்களாகவே தொடர்வார்களா அல்லது திருமணம் செய்து கொண்ட பின் அவர்களது வாழ்க்கையைப் பற்றி சொல்வார்களா என ரசிகர்கள் இப்போதே யூகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.




