‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

தமிழில் பிரபுதேவா நடித்த 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் கதாநாயகியாக, விஜய் நடித்த 'குஷி' படத்தில் 'மெக்கரினா' பாடலுக்கு நடனமாடியவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 90களில் இருந்து நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவுகளையும், போட்டோக்களையும் பதிவிட்டு வரும் பழக்கம் கொண்டவர். ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். தவறாமல் ஜிம் செல்வதையும், யோகா செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பவர் ஷில்பா.
நேற்று அவருடைய சமூக வலைதளத்தில் ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். 50 வயதாகும் ஷில்பா இவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். உடற்பயிற்சியும், யோகாவும் நமது உடல் அழகிற்கும், இளமைக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை ஷில்பா போன்ற பிரபலங்கள்தான் அடிக்கடி புரிய வைக்கிறார்கள்.