ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் 'தண்டேல்', ஹிந்தியில் 'ராமாயணா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக எந்தவிதமான கோபமான பதிவையும் அவருடைய சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டதில்லை. இந்நிலையில் நேற்று வெளியான செய்தி ஒன்றிற்கு கோபமான பதிவைப் பதிவிட்டுள்ளார். அதாவது, ராமாயணம் படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி படப்பிடிப்பு முடியும்வரை அசைவ உணவுகளை தவிர்ப்பதாகவும் இதற்காக அவர் ஹோட்டலில் கூட சாப்பிடாமல், வெளியூர்களுக்குச் செல்லும்போது கையோடு சமையல்காரர்களை அழைத்துச் செல்வதாகவும் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கோபமாக ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.
“அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடனோ, இல்லாமலோ பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் நான் அமைதியாக இருக்கவே விரும்புவேன். ஆனால் தொடர்ந்து இவ்வாறு நடப்பதால், குறிப்பாக எனது படத்தின் வெளியீட்டின் போதோ, அறிவிப்புகள் வெளியாகும் சமயங்களிலோ இது போன்ற வதந்திகள் பரப்பப்படுவதால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.
அடுத்த முறை ஏதேனும் பிரபலமான பக்கமோ, ஊடகமோ, தனிநபரோ, கிசுகிசு (அ) செய்தி என்ற பெயரில் இதுபோன்ற தவறான தகவலை பரப்பினால், அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்,” எனப் பதிவு செய்துள்ளார்.




