'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சீனு ராமசாமி. 2007ம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் விஜய்சேதுபதியை பிரபலமாக்கினார். பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்களை இயக்கினார். இவர் இயக்கி முடித்துள்ள இடிமுழக்கம், இடம் பொருள் ஏவல் படங்கள் வெளிவரவில்லை.
இவருடைய படங்களில் பாடல் எழுதிய ஒரு பெண் பாடலாசிரியையை காதலித்து வந்த நிலையில் 2007ம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 17 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், இன்று திடீரென தாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக சீனு ராமசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
‛‛அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி ஜிஎஸ் தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.” என பதிவிட்டுள்ளார்.