திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
2016ம் ஆண்டில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் தர்மதுரை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், அதில் விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
அதையடுத்து வேறு ஹீரோவை வைத்து சீனுராமசாமி தர்மதுரை-2வை இயக்குகிறார் என்கிற செய்திகள் வெளியானபோது, அந்த படத்தை தான் இயக்கவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் சீனுராமசாமி. இந்தநிலையில் தற்போது தர்மதுரை-2 படத்தை தயாரித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், விஜய்சேதுபதி, சீனுராமசாமி ஆகிய இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருப்பதால் தர்மதுரை-2 படத்தில் அவர்கள் இடம்பெறவில்லை. அதனால் அப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த ரோலில் நான் நடிக்க, வேறொரு இயக்குனர் இயக்குகிறார் என்று ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். விரைவில் தர்மதுரை-2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.