நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான் கைவசம் ‛குருப்', 'ஹே சினாமிகா', 'சல்யூட்' உள்ளிட்டப் படங்கள் உள்ளன. அடுத்ததாக, பாலிவுட் இயக்குனர் பால்கியின் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், கேரளாவில் கொள்ளை சம்பவங்களால் அதிரவைத்த சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் 'குருப்' முன்பு, ஓடிடி.,யில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், கேரளாவில் அக்.,25ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், தியேட்டரிலேயே வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
துல்கர் சல்மானே தயாரித்துள்ள இப்படத்தில், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது.