'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சீனு ராமசாமி இயக்கத்தில், இளையராஜா - யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாமனிதன்'. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டரை வருடங்களுக்கு முன்பாக 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிந்துவிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.
இப்படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் அறிவிக்கவில்லை. ஆனாலும், படத்தின் இரண்டு பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளார்கள். அந்தப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் படம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி நேற்று வெளியிட்டுள்ளார். டுவிட்டரில், “37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரை தொடக் காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்சார் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் படல் நடித்த 'இடம் பொருள் ஏவல்' படம் முடிந்வடைந்து ஆறு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. ஓடிடியிலாவது இப்படம் வெளிவருமா என விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமி இப்படம் பற்றி இதுவரையிலும் எதுவுமே சொன்னதில்லை.