'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த படம் மாமனிதன். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து தயாரித்திருந்தார். சந்தர்ப்ப சூழ்நிலையால் குடும்பத்தை விட்டு பிரிய நேர்ந்த குடும்பத் தலைவர், கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்து கொண்டே அந்த குடும்பத்தை எப்படி வாழ வைக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்த இந்த படம் தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் பார்க்க விரும்பியுள்ளார். அவருக்கு தனிகாட்சியாக படத்தை போட்டு காட்டினர் இயக்குனர் சீனு ராமசாமி. படத்தை பார்த்த மத்திய அமைச்சர் எல்.முருகன் “மாமனிதனை பார்த்து பல இடங்களில் நெகிழ்ந்தேன். இந்த படம் பெற்ற சர்வதேச விருதுகளுக்கு எனது பாராட்டுகள். வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி” என்றார்.