டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி அவரது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரவுடி பிக்கர்ஸ் நிறுவனம். இந்த படத்திற்கு தற்காலிகமாக என்டி81 என்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது நயன்தாரா நடிக்கும் 81வது படம் என்று பொருள். இந்த படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படங்களை இயக்கிய ஆர்.எஸ்.செந்தில்குமார் இயக்குகிறார்.
இதுகுறித்து விக்னேஷ்சிவன் விடுதுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது: நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான படங்களை கொடுத்த துரை செந்தில்குமாருடன் இணைந்ததில் மகிழ்ச்சி. நயன்தாராவின் 81வது படத்தின் கதையை அவர் கூறியபோது பார்வையாளர்களுக்கு பிடித்த பல அம்சங்கள் அதில் இருந்தது. விரைவில் இந்த படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிக்கப்படும். என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் ஒரு யானையின் முகத்தில் நயன்தாராவின் கை ஆதரவாக தடவிக் கொடுப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தபோது இதில் நயன்தாரா யானையை பராமரிப்பவராக நடிப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் வாழ்கை பற்றிய படமாக இருக்கலாம் என்று தெரிகிறது. யானைகளின் பாதுகாப்பிற்காக போராடும் ஒரு அனிமல் லவ்வரின் கதை என்றும் கூறப்படுகிறது.