தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு | லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? |
விஜய் சேதுபதி முதன்முதலாக நாயகனாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. அதன் பிறகு அவர்களது கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்கள் உருவாகி உள்ளன. இதில், இடம் பொருள் ஏவல் கிடப்பில் கிடக்கிறது. தர்மதுரை 2016ம் ஆண்டு வெளியானது. மாமனிதன் படம் வருகிற ஜூன் 24 ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் சீனுராமசாமி கூறுகையில், ‛‛2011ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு படம் வெளியான அதே நாளில் தான் விஜய் சேதுபதியை வைத்து நான் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படமும் திரைக்கு வந்தது. அப்போது சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு நானும், விஜய் சேதுபதியும் பைக்கில் சென்று எங்களது படத்தை பார்க்க ரசிகர்கள் டிக்கெட் எடுக்கிறார்களா? என்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது அந்த தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த கமல்ஹாசனின் கட்-அவுட்டை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. அப்படிப்பட்ட விஜய்சேதுபதி இப்போது கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்று உள்ளார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.