முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
இளையராஜா தற்போது விடுதலை, நட்சத்திரம் நகர்கிறது, துப்பறிவாளன் 2, தமிழரசன், மாயோன், மாமனிதன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக இசையமைத்து வரும் இளையராஜா, வெளிநாடு, உள்நாடு என அவ்வப்போது பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். சென்னை, கோவையை தொடர்ந்து வருகிற ஜூன் 26ல் இசையென்றால் இளையராஜா என்ற பெயரில் மதுரையில் அவர் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலுவும், இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களை பாட உள்ளார். இது குறித்து வடிவேலு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‛‛நான் பிறந்த மதுரை மீனாட்சி பட்டினத்திற்கு எங்கள் இசைஞானி கச்சேரி நடத்துவதற்கு வருகிறார். அதை கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நானும் அந்தக் கச்சேரிக்கு கண்டிப்பாக வருகிறேன். தரையில் பாடிக்கொண்டிருந்த என்னை திரையில் பாட வைத்தவர் இளையராஜா தான். நான் திரையில் புகுந்து விளையாடுவதற்கு அவர் தான் காரணம். பாட்டு பாடுவதற்கும் எனக்கு பிள்ளையார் சுழி போட்டது ஐயா இளையராஜா தான். மதுரை இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா முன்பு பாடி உங்கள் அனைவரையும் சந்தோசப்படுவேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார் வடிவேலு. இந்த நிகழ்ச்சி ஜூன் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறுகிறது.