இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
'கண்ணுப்பட போகுதய்யா' படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது: நான் நடித்த 'விசித்திரன்' ஓடிடியில் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த 'மாமனிதன்' திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய்தான் கிடைத்தது. ஆனால் அதுவே ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சமீபத்தில் வெளியான 'லைகர்' படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தின் ரிலீஸ் செய்தேன். ஆனால் அது ஓரளவுக்குத்தான் வசூலித்தது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்'. இவ்வாறு அவர் பேசினார்.