ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய படம் மாமனிதன். இந்த படத்திற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசை அமைத்து இருந்தனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது . அதோடு மாமனிதன் படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் என்ற கோல்டன் விருது கிடைத்தது. அதன் பிறகு இந்தோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என்ற பிரிவில் இரண்டு விருதுகள் கிடைத்தது. பின்னர் தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இப்படி ஏற்கனவே பல விருதுகளை பெற்ற மாமனிதன் படத்திற்கு தற்போது பூட்டான் நாட்டில் நடைபெற்ற டுருக்(Druk) சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த குடும்ப படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்திருக்கிறது. இந்த தகவலை இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.