அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சமீபத்தில் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு எதிராக ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். அதையடுத்து அவர் மீது இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக திராவிட கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். பின்னர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கனல் கண்ணன். ஆனால் அவரது அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டார்கள். இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கனல் கண்ணனை தேடி வந்த காவல்துறையினர் தற்போது புதுச்சேரியில் அவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்துள்ளார்கள்.