‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
மத்திய அரசு சார்பில் 'ஒரே பாரதம் - உன்னத பாரதம்' இயக்கத்தின்கீழ், தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள வரலாற்று தொடர்பை எடுத்துரைக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மாதம் 17ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. வருகிற 16ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 திரைப்படங்கள் அங்கு திரையிடப்படுகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன் படம் இன்று (12ம் தேதி)யும். நடிகர் திலகம் சிவாஜி நடித்த திருவிளையாடல் படம் நாளையும், கர்ணன் படம் நாளை மறுநாள் 14ம் தேதியும், திரையிடப்படுகிறது.
கர்ணன் மற்றும் திருவிளையாடல் படங்களோடு மாமனிதன் படம் திரையிடப்படுவதற்கு காரணம், இந்த படத்தில் விஜய்சேதுபதி சாதாரண மனிதனான இருந்து மாமனிதனாக மாறும் இடம் காசி. அதனால் இந்த படம் திரையிடப்படுகிறது.