'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
எல்லா முன்னணி நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார் பொன்னியின் செல்வன் பூங்குழலி. அதாவது ஐஸ்வர்ய லட்சுமி. எதில் முதலிடம் தெரியுமா? அவர்தான் இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர். அவர் நடித்த 9 படங்கள் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. இது ஒரு சாதனை அளவாகும். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நடிகை நடித்த 9 படம் வெளிவரவில்லை என்கிறார்கள்.
தமிழில் புத்தம்புது காலை விடியாதா, கார்கி, பொன்னியின் செல்வன், கேப்டன், கட்டா குஸ்தி படங்களும், மலையாளத்தில். அர்ச்சனா நாட் அவுட், குமாரி ஆகிய படங்களும், தெலுங்கில், அம்மு, கோட்சே என்ற படங்களும் அவர் நடித்து வெளியானது. இதில் கார்கி மற்றும் குமாரி படங்களை ஐஸ்வர்ய லட்சுமி தயாரித்திருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம், மலையாளத்தில் கிறிஸ்டோபர், கிங்க ஆப் கோதா படங்களில் நடித்து வருகிறார்.