இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை தவம் செய்தால் இது அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

கோயிலில் 60, 70, 80, 90, 100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு இன்று(டிச., 12) குடும்பத்துடன் வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோ பூஜை, கஜ பூஜை செய்தும், சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தியும் சுவாமி தரிசனம் செய்தார். பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.