2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் விநாயகன். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் வித்தியாசமான வசன உச்சரிப்புடன் தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பொது மேடைகளில் பேசும்போது அல்லது சோசியல் மீடியாவில் கருத்து தெரிவிக்கும்போது ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருப்பவர் தான் விநாயகன். சமீபத்தில் கூட விமான பயணத்தின் போது தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார் என இவர் மீது இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ள நிகழ்வும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் இவருடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ள கர்ணன் புகழ் நடிகை ரஜிஷா விஜயனோ நடிகர் விநாயகன் பற்றி கூறும்போது அவர் ஒரு தனித்துவமான நடிகர் என பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார்.
விரைவில் மலையாளத்தில் வெளியாக உள்ள மதுர மனோகர மோகம் என்கிற படத்தில் கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். முக்கிய வேகத்தில் நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இந்த படத்தில் விநாயகனுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜிஷா விஜயன் கூறும்போது நடிகர்களின் விநாயகன் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர். அது மட்டுமல்ல அவரது பெர்சனாலிட்டி அவரை எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தும் தனித்து காட்டும் என்று பாராட்டியுள்ளார்.
இப்போது மட்டுமல்ல கடந்த 2017ல் துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விநாயகனுக்கு கேரள அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. அதே வருடத்தில் சிறந்த நடிகைக்கான விருதை ரஜிஷா விஜயன் பெற்றார். அந்த சமயத்தில் கூட விநாயகன் பற்றி ரஜிஷா பாராட்டி பேசும்போது யாரையும் ஒருவரது நிறத்தை வைத்து குறைவாக மதிப்பிடக் கூடாது என்று சுட்டிக்காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.