டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். தற்போது அவர் மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தார்
படங்களில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். தற்போது அவர் துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் பயிற்சி அளித்து வருகிறார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ‛‛எதிர்பாராத விஷயங்கள் நடந்தால் நிச்சயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வார இறுதியில் நான் திருச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டேன். தேசிய துப்பாக்கி சுடும் வீரர் ராஜசேகர பாண்டியன் எனக்கு ஊக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி. எனக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததற்கும் எனக்கு சில முறைகளை கற்பிப்பித்த அவருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி எனக்கு ஒரு அற்புதமான அனுபவம். இப்போது நான் ரைபிள் கிளப்பின் கவுரவ உறுப்பினர் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. திருச்சியை அடுத்து சென்னையிலும் எனது துப்பாக்கிச்சூடு பயிற்சி தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.