பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தில் பலரும் பான் - இந்தியா படங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளாக 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம்' ஆகிய பான்-இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பாடல்களை மட்டும் யு-டியூபில் வெளியிட்டுள்ளார்கள். 'ராதே ஷ்யாம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.
'புஷ்பா' படத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'சாமி சாமி' பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. வித்தியாசமான டியூன், குரல், வரிகள், ராஷ்மிகாவின் கிளாமர் என இப்பாடல் ரசிகர்களிடம் உடனடியாக சென்று சேர்ந்தது. ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இதன் தெலுங்குப் பாடல் 38 மில்லியன் பார்வைகள், தமிழ்ப் பாடல் 7 மில்லியன், மலையாளம் 2 மில்லியன், கன்னடம் 1 மில்லியன் என பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல் கடந்த வாரம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் யு-டியுபில் வெளியானது. கடந்த ஐந்து நாட்களில் இந்தப் பாடல் தெலுங்கில் 15 மில்லியன் பார்வைகள், தமிழில் 2 மில்லியன், கன்னடத்தில் 2 லட்சம், மலையாளத்தில் 1 லட்சம், ஹிந்தியில் 7 மில்லியன் பார்வைகள் என அடுத்த வரவேற்பைப் பெற்ற பாடலாக உள்ளது.
இந்த இரண்டு பாடல்களுக்கும் போட்டியாக அடுத்து பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தின் மூன்று முக்கிய படங்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்திய சினிமாவில் அடிக்கடி பேசப்படும் படங்களாக இருக்கப் போகிறது.