இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ் சினிமாவையும் மலையாள சினிமாவையும் பிரிக்கவே முடியாது. மலையாள நடிகர்கள் தமிழில் நடிப்பதும், தமிழ் படங்கள் கேரளாவில் நல்ல வரவேற்பு பெறுவதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மலையாள படங்களுக்கு தமிழில் வரவேற்பு கிடைப்பதால் அங்கு உள்ள இளம் நடிகர்களை தமிழ் இயக்குனர்கள் அழைத்து வருகின்றனர்.
பகத் பாசில், டொவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ் என பட்டியல் நீள்கிறது. இந்த வரிசையில் சிம்புவின் வெந்து தணிந்து காடு படத்தில் மலையாள இளம் நடிகர் நீரஜ் மாதவ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். படத்தில் அவர் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் ஒரு மாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.