2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம், ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2 , 10 தல என புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடியில் வெளியான படம் ஓ மணப்பெண்ணே. பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். கார்த்தி சுந்தர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்த இந்த படம் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்.
இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைய இருக்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இந்த படத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்கிறார்.