பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி வெளியாகிறது | வெற்றியின் ரகசியத்தை சொன்ன நயன்தாரா | பாடகர் அறிவு திருமணம் : இளையராஜா வாழ்த்து | 'வின்டேஜ் ஷங்கர்' எனப் புகழும் கார்த்திக் சுப்பராஜ் | பரபரப்பில்லாமல் போன பொங்கல் வெளியீடுகள் | ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரியை போடுங்க : வடிவேலு | பாலிவுட்டின் மகா ஆரோக்கிய கேம்ப் அறிமுக விழாவில் விந்து தாரா சிங், பூனம் தில்லான் | வெள்ளிக்கிழமை பட ரிலீஸிற்கு கோர்ட் முன் காத்திருக்கும் திரைப்பட துறையினர் | 'கேம் சேஞ்ஜர்' முதல் நாள் வசூல் 186 கோடி | அஞ்சலிக்கு இந்த வருடம் இரட்டைப் பொங்கல் |
தென்னிந்தித் திரையுலக நடிகைகளும், பாலிவுட் நடிகைகளும் கடந்த சில வருடங்களாக மாலத் தீவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதுவரையிலும் பல முன்னணி நடிகைகள் மாலத் தீவிற்குச் சென்று வந்துவிட்டார்கள். அங்கு சுற்றுப்பயணம் என்றாலே அந்த நடிகைகளின் இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்கள் பதிவிடப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர்களில் சில நடிகைகள் மட்டும் படுகிளாமரான பிகினி புகைப்படங்களைப் பதிவிடுவார்கள். சிலர் லாங்ஷாட்டில் மட்டும் எடுக்கும் பிகினி படங்களை வெளியிடுவார்கள்.
இரு தினங்களுக்கு முன்புதான் 'பீஸ்ட்' பட கதாநாயகி மாலத் தீவில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார். அப்போதே அவர் சீக்கிரத்திலேயே பிகினி புகைப்படங்களையும் பதிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், 'டூ பீஸ்' பிகினி புகைப்படமாக இல்லாமல் கவர்ச்சி குறைவான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் பூஜா.
“சாதாரண ஒரு பெண், அசாதாரணமான அனுபவத்தைப் பெற காத்திருக்கிறார்,” என தனது புகைப்படங்களுக்கு கருத்து சொல்லியிருக்கிறார் பூஜா.