அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அடுத்து டோலிவுட்டிலும் சமீபத்தில் கால் பதித்தார். தெலுங்கின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷ் நடிக்கும் 2 வது தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு வரும் 19ந்தேதி ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்குகிறது. தொழி பிரேமா மற்றும் ரங் தே படங்களின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் படத்தை எடுக்க தீர்மானித்துள்ளார்.
தமிழ் நடிகர்கள் இப்போது நேரடி தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க முதலில் ஓகே சொன்னவர் நடிகர் விஜய். தோழா படப்புகழ் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளியுடன் அடுத்த படத்தில் அவர் இணையவிருக்கிறார்.