திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் | என் ஓட்டுக்கு விஜய்க்கு தான் - ஆல்யா மானசா பேட்டி | காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? |
தமிழ்நாட்டில் உள்ள பெப்சி உள்பட இந்தியாவில் உள்ள திரைப்பட சங்கங்கள் அனைத்தும் இணைந்துள்ள அமைப்பு 'இந்திய திரைப்பட கூட்டமைப்பு'. (பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா) இதில் 18 ஆயிரம் திரைப்பட தயாரிப்பாளர்கள், 20 ஆயிரம் விநியோகஸ்தர்கள், 12 ஆயிரம் ஸ்டுடியோ உரிமையாளர்கள் உறுப்பினராக உள்ளனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் நோக்கம் இந்திய சினிமாவினை உலக தரத்திற்கு மேம்படுத்துவதே ஆகும்.
இந்த அமைப்பின் செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இதில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளருமான ஐசரி கணேஷ் இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தராக இருப்பதுடன் தமிழில் பிரபல தயாரிப்பாளராகவும் இருக்கிறார். தேவி, போகன், எல்கேஜி, கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சீறு, வெந்து தணிந்தது காடு, சிங்கப்பூர் சலூன், ஜோஸ்வா இமைபோல் காக்க உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.