சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் | என் ஓட்டுக்கு விஜய்க்கு தான் - ஆல்யா மானசா பேட்டி | காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது |
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். 74 வயதிலும் இன்னும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகனாக வலம் வருகிறார். அவருடைய படங்கள் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். நடிகர் ரஜினிகாந்த் இன்று(டிச., 12) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரைப்பற்றிய ஒரு பிளாஷ்பேக் செய்தியை இங்கு காண்போம்.
'ஒரு புகழ்பெற்ற நட்சத்திரத்தை சந்திக்க விரும்பும் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுமி' என்பதுதான் 'அன்புள்ள ரஜினிகாந்தின்' ஒன்லைன். எல்விஸ் பிளஸ்சி என்ற ஹாலிவுட் நடிகர் நடித்த படத்தின் கதையை தழுவி எழுத்தாளர் தூயவன் எழுதிய கதை இது. இந்த கதையை ஸ்ரீதர் இயக்க மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பதாக இருந்தது. 'ரத்தத்தின் ரத்தமான எம்ஜிஆர்' என்று டைட்டிலும் வைக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர் அரசியலில் பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் இந்த கதையில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதிய தூயவன் ரஜினியின் நண்பர் நட்ராஜிடம் கூறினார்.
நட்ராஜும் ரஜினியிடம் சொல்ல அவருக்கு கதை பிடித்து விட்டது. நீயே இயக்கு என்று நட்ராஜையே இயக்கவும் சொல்லிவிட்டார். நண்பனின் படம் என்பதால் சம்பளமே வாங்காமல் நடித்தார் ரஜினி. 10 நாள் கால்ஷீட் கொடுத்து 6 நாள் நடித்து கொடுத்தார். ரஜினியை நேசிக்கும் சிறுமியாக மீனா நடித்தார்.
ரஜினி வீட்டில் எடுக்கப்பட்ட ஒரே படமும் இதுதான், லதா ரஜினி தோன்றிய ஒரே படமும் இதுதான். 15 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் 24 லட்சத்திற்கு விற்கப்பட்டது. 50 லட்சம் வரை வசூலித்தது.
நிஜத்திலும் ரஜினி அன்பானவர் என்பதற்கான உதாரணம் இது. ஒரு முறை அமெரிக்காவில் இருந்து ஒரு போன் ரஜினிக்கு “சார் உங்களை பார்க்க வேண்டும் என்று எனது 4 வயது மகன் துடிக்கிறான். அவனை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. அவனை நாங்கள் டார்ச்சர் செய்வதாக அடிக்கடி போலீசுக்கும் போன் செய்கிறான். எங்கள் நிம்மதியே போச்சு. ஒரு முறை நீங்கள் அவனை பார்க்க அனுமதி கொடுங்கள். அடுத்த பிளைட் பிடித்து வந்து விடுகிறோம்” என்றது. அந்த குரல். “சரி வாங்க பார்த்துடலாம் அந்த பொடியனை” என்றார் ரஜினி.
உடனே அந்த குடும்பம் ஒரு சில நாளிலேயே சென்னை வந்தது. ரஜினியை சந்திக்க சென்றார்கள். ரஜினியும் அவர்களை சந்தித்தார்கள். ரஜினியை பார்த்ததும் அந்த சிறுவன் சத்தமிட்டு அழுதான் 'என்னை ரஜினியை பார்க்க கூட்டிட்டு போங்க' என்று அழுதான். எதிரில் இருப்பது ரஜினி என்று அவனுக்கு தெரியவில்லை.
அப்போது ரஜினி தனது இயல்பான தோற்றத்தில் இருந்தார். அதை புரிந்து கொண்ட ரஜினி தனது உதவியாளரை அழைத்து காஷ்ட்யூம் டிசைனர், மேக்அப்மேனை அழைத்தார். அரை மணி நேரத்தில் அவர்கள் வந்தார்கள். அந்த சிறுவனை அருகில் அழைத்த ரஜினி 'ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு கண்ணா ரஜினி வந்துடுவாரு' என்று கூறிவிட்டு உள்ளே போனார். அடுத்த 15 நிமிடத்தில் இளமையான தோற்றத்தில் அவன் முன் வந்து நின்றார். அழுகையை நிறுத்திய சிறுவன் அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தான். அந்த குடும்பமே மகிழ்ந்து போனது.
சிறுவன் அடுத்த குண்டை போட்டான். 'இப்பவே நீங்க எங்க கூட வரணும்' என்று அழ ஆரம்பித்தான். திடுக்கிட்ட ரஜினி சமாளித்துக் கொண்டு 'எனக்கு அனுவல் எக்சாம் இருக்கு அதை எழுதிட்டு வர்றேன்' என்று அனுப்பி வைத்தார்.