சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு |
கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி ஹேமா கமிஷன் தலைமையிலான அறிக்கை கேரளாவில் வெளியிடப்பட்டது. மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் சம உரிமை மறுக்கப்படுவது உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக விசாரணை நடத்தி அறிக்கையாக சமர்ப்பித்தார் நீதிபதி ஹேமா. அதில் திரையுலகில் சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைதான் என்றும் அவற்றை கேரள அரசு களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.
இதை தொடர்ந்து பல பெண்கள், நடிகைகள் பிரபல நடிகர்கள் இயக்குனர்கள் மீது தொடர்ந்து புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதேசமயம் இந்த அறிக்கையில் 16 பக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டு அப்போது வெளியிடப்பட்டது. இந்த நீக்கப்பட்ட பக்கங்களில் தான் விசாரணையில் பங்கேற்ற பெண்கள் தாங்கள் யாரால் இது போன்ற பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானோம் என்று சொன்ன அந்த பெயர்கள் அடங்கியிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதை அப்போதே வெளியிட்டு இருந்தால் மிகப்பெரிய அளவில் மலையாள திரை உலகில் பிரச்னை வெடித்திருக்கும் என்பதால் கேரள அரசு அதில் குறிப்பிட்டு அந்தப் பக்கங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்த்து விட்டது. அதே சமயம் அந்த பக்கங்களையும் வெளியிட வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை அல்லது இன்று அறிக்கையின் விடுபட்ட பக்கங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எதிர்பாராத ஒரு திருப்பமாக இந்த அறிக்கையை வெளியிடும் அதிகாரம் வாய்ந்த செய்தித்துறை கமிஷனர் தற்போது அரசு அலுவல் காரணமாக வெளியூர் செல்கிறார் என்றும் வரும் வெள்ளிக்கிழமை தான் திரும்புகிறார் என்றும் அவர் வந்த பிறகு இந்த விடுபட்ட பக்கங்கள் வெளியிடப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் இருந்து ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வழக்கை மேற்கோள்காட்டி இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு மேலும் தாமதம் செய்யப்படும் என்றும் ஒரு தகவல் தற்போது வெளியே பேசப்படுகிறது.