வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடும் பல பெண்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகிறார்கள் என பல வருடங்களாக சொல்லப்பட்டு வந்த ஒரு குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல நடிகைகள் துணிச்சலாக வெளிவந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். பல பிரபலங்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது கர்நாடகாவை சேர்ந்த ஆண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி அதிர்ச்சி அளித்தார்.
12 வருடங்களுக்கு முன்பு தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னை பெங்களூருவில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு வர சொன்ன இயக்குனர் ரஞ்சித் அங்கே தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை எடுத்து அதை ஒரு பிரபல நடிகைக்கு அனுப்பியும் வைத்தார் என்று தனது குற்றச்சாட்டில் கூறியிருந்தார். முதலில் கேரளாவில் இது குறித்து இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் பின்னர் அது கர்நாடகா காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது .
அப்போது புகார் அளித்திருந்த அந்த நபர் கூறியது போல சம்பவம் நடந்த அந்த வருடத்தில் பெங்களூருவில் ஏர்போர்ட் அருகில் அவர் குறிப்பிட்டு இருந்த தாஜ் ஹோட்டல் உருவாகவில்லை என்றும் அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்தே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டது என்றும் இயக்குனர் ரஞ்சித் தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரத்துடன் வாதிட்டனர். மேலும் சம்பவம் நடந்த உடனே இயக்குனர் ரஞ்சித் மீது புகார் அளிக்காமல் 12 வருடங்கள் தாமதப்படுத்தியது எதற்காக என்கிற கேள்வியையும் அவர்கள் நீதிமன்றத்தில் எழுப்பினார்கள்.
வாதங்களை உற்று கவனித்த நீதிமன்றம் புகார்தாரர் தரப்பில் நிறைய தவறுகள் உள்ளதை சுட்டிக்காட்டி, ஒரு விஷயத்தில் தவறாக சித்தரிக்க துவங்கினால் மற்ற எல்லாமே தவறாகத்தான் இருக்கும் என்று கூறி இயக்குனர் ரஞ்சித் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்துள்ளனர். மேலும் இதில் உள்ள உண்மை தன்மையை முழுவதுமாக வெளிக்கொணரும் நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம் ஜனவரி 17ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது.