வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
தமிழில் 'நேரம், ராஜா ராணி, நய்யாண்டி' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் மலையாளத்தில் 'பெங்களூர் டேஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவருமான நடிகை நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பின் நடிப்புக்கு சிறிய இடைவெளி விட்டிருந்தார். சமீப காலமாக செலெக்ட்டிவ்வான படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ள 'சூட்சும தர்ஷினி' என்கிற திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக 'மின்னல் முரளி' பட இயக்குனரும் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' மற்றும் 'குருவாயூர் அம்பலநடையில்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தருமான பஷில் ஜோசப் நடித்திருந்தார்.
இந்த படத்தை எம் சி என்பவர் இயக்கி இருந்தார். தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இளைஞர் ஒருவரின் மர்மமான செயல்பாடுகளை கண்காணிக்கும் வித்தியாசமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நஸ்ரியா இதில் நடித்திருந்தார். இந்த படம் வித்தியாசமான கதையம்சம் மற்றும் புதிய கோணத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் இந்த படத்தின் எதிர்பாராத திருப்பங்களாக அமைந்து படத்தின் வெற்றிக்கும் வித்திட்டன.
தற்போது படம் வெளியாகி 18 நாட்கள் ஆன நிலையில் இந்த படம் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இந்திய அளவில் 28.05 கோடியும் வெளிநாடுகளில் 21.7 கோடியும் வசூலித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் 'புஷ்பா 2' திரைப்படம் தன் ஆதிக்கத்தை செலுத்தினாலும் கூட இந்த 'சூட்சும தர்ஷினி' படம் பல திரையரங்குகளில் இன்னும் வலுவாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே மலையாளத்தில் இந்த வருடத்தில் வெளியான 'பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம்' உள்ளிட்ட படங்கள் 100 கோடி தாண்டி வசூலித்தன. அந்தவகையில் சூட்சும தர்சினியும் அந்த இலக்கை எட்டுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.