காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் | ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன் |
மலையாள திரையுஉலகில் கடந்த 2017 ஆம் வருடம் பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பிலிருந்து திரும்பியபோது காரிலேயே சில நபர்களால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானதுடன் அப்படி சித்திரவதை செய்யப்படுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்த ஒருவருக்கே இந்த கதியா என பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருக்கிறது என்றும் அவரது ஏற்பாட்டின் பேரில் தான் அவர் ஏவி விட்டு ஆட்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்தார். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகும் நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஆமை வேகத்தில் தான் நகர்ந்து வருகிறது. இது குறித்து நடிகை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வழக்கை விரைவாக நடத்த மனு தாக்கல் செய்தும் அந்த வழக்கில் அதே நிலை தான் நீடிக்கிறது.
குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் அந்த வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு கைப்பற்றப்பட்டபோது அதில் பதிவாகியிருந்த காட்சிகள் அனைத்துமே அளிக்கப்பட்டு இருந்ததாக அதை பரிசோதித்த ஆய்வுக்கூட அதிகாரிகள் கூறினார்கள். இந்த நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என இரு பக்கமும் காட்டப்படும் மெத்தனம் குறித்து சம்பந்தப்பட்ட நடிகை தற்போது ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகியும் இந்த வழக்கில் எனக்கு நீதி கிடைக்க தாமதமாகி வருகிறது. குறிப்பாக அந்த மெமரி கார்டை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் எந்த காட்சிகளும் இல்லை. அழிக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்கள். அந்த ஆய்வின் உண்மைத்தன்மை பற்றி அந்த அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும், ஆனால் இதுவரை விசாரிக்கப்படவில்லை, அது மட்டும் அல்ல அப்படி அந்த நீக்கப்பட்ட காட்சிகள் பின்னாளில் வெளியானால் என்னுடைய எதிர்காலத்தையே மிகவும் பாதிக்கும்,
எனவே இந்த வழக்கில் விரைந்து விசாரணையை நடத்த வேண்டும் என்றும் எனக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் எனவே தாங்கள் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சொல்லி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்திரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நடிகை இப்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.