ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை(மார்ச் 10) வெளிவருகிறது. இதனை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளா சென்ற சூர்யா, அங்கு பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசி உள்ளார்.
"இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாயமற்ற செயல். நவீனமான உலகத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கவே கூடாது. அதை நினைக்கும் போது மனசு வலிக்கிறது” என பேசியுள்ளார்.
எதற்கும் துணிந்தவன் படமும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் பின்னணில் உருவாகி உள்ள படம் என்று கூறப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் டிரைலரும் அதனை உறுதிப்படுத்துகிறது.