கூலி படத்தின் ‛சிக்கிட்டு வைப்': ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த படக்குழு | கவுதம் மேனன் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி | துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டாவுடன் பாடகி ஜஸ்லீன் ராயல் | செல்வராகவனுடன் மூன்றாவது முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் | கீர்த்தி சுரேஷ் திருமணம் : நேரில் சென்று வாழ்த்திய விஜய் | மிஸ் யூ தள்ளிப்போன விரக்தி ; தொடர்ந்து புஷ்பா 2 மீது சித்தார்த் காட்டம் | பாலியல் வழக்கில் இயக்குனர் பாலச்சந்திர மேனனுக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் ; புகார்தாரருக்கு குட்டு | தமன்னா பட நடிகர் கடத்தப்பட்டு 12 மணி நேரம் சித்ரவதை ; சாமர்த்தியமாக தப்பினார் | காதலர் ஆண்டனியை மணந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் : கோவாவில் திருமணம் கோலாகலம் | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது. மலையாள திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தொந்தரவுகள் உள்ளிட்ட பல பிரச்னைகளை சில வருடங்கள் தீவிரமாக விசாரணை செய்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அது போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பது உண்மைதான் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த அறிக்கை தந்த துணிச்சலில் சில பெண்கள் அதாவது அவ்வளவு பிரபலமில்லாத நடிகைகள் பலர் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது தாங்கள் அவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானோம் என காவல்துறையில் புகார் அளித்தனர்.
அப்படி கேரள பாக்யராஜ் என்று அழைக்கப்படும் இயக்குனரும் நடிகருமான பாலச்சந்திரன் மேனன் மீது அவ்வளவாக பிரபலமில்லாத நடிகை ஒருவர் 2008 ல் 'தே.... இங்கோட்டு நோக்கியே' என்கிற படத்தில் அவர் டைரக்சனில் நடித்தபோது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலச்சந்திர மேனன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார் பாலச்சந்திர மேனன். அவருக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி இடைக்கால முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்த விவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, “பாலச்சந்திர மேனன் மீதான குற்றச்சாட்டு ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே பதியப்பட்டுள்ளது. ஆனால் 17 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை இப்போது புகாராக அளிப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதப்படுகிறது. பாலச்சந்திர மேனன் இந்த சமூகத்தில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் நடிகர், இயக்குனர். அது மட்டுமல்ல உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். அப்படிப்பட்டவர் மீது போகிற போக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் களங்கத்தை சுமத்தி விட முடியாது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த சமூகத்தில் மரியாதையும் கவுரவமும் இருக்கிறது.. அதையும் பார்க்க வேண்டும்” என்று புகார்தாரர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்து பாலச்சந்திர மேனனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.