வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பியபோது படக்குழுவை சேர்ந்த சிலரின் உதவியுடன் சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டு காருக்குள்ளேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். அதுமட்டுமல்ல அந்த காட்சிகளை சம்பந்தப்பட்ட நபர்கள் வீடியோவாகவும் பதிவு செய்தனர். அதன் பிறகு அவர்களிடம் இருந்து விடுபட்ட நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இப்படி வீடியோ எடுத்த பல்சர் சுனில் என்பவர் நடிகர் திலீப்புக்கு நெருக்கமானவர் என்றும் திலீப்பின் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்த குற்றச் செயல் நிகழ்ந்தது என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதம் சிறைவாசமும் அனுபவித்து பின் ஜாமீனில் வெளிவந்தார். அது மட்டுமல்ல அந்த சமயத்தில் திலீப் சிறை செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஒரு காலத்தில் அவரது நண்பராக இருந்து, பின்னர் சில காரணங்களால் அவரது எதிரியாக மாறிய இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர்தான். இவர் ஓரிரு படங்களை இயகியுள்ளார். நடிகை கடத்தல் குறித்த வீடியோ காட்சிகளை திலீப் தன் வீட்டில் பார்த்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய அவர் நீதிமன்றத்திலும் அதை சாட்சியமாக பதிவு செய்தார்.
இதன் அடிப்படையிலேயே நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக முடிவில்லாமல் நடந்து வரும் நிலையில் தற்போது பாலச்சந்திர குமார் உடல்நல குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். கோழிக்கோடு அருகில் உள்ள தனது சொந்த ஊரான செங்கநூரில் வசித்து வந்த அவர் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. இவரது மரணம் இந்த வழக்கில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.