புத்தன் இயேசு காந்தி படத்தில், வசுந்தரா, சமூக பொறுப்புமிக்க பத்திரிகையாளராக நடிக்கிறார். அவருடன் அசோக் ஜாலியான பத்திரிகையாளராக நடிக்கிறார். இருவரும் இணைந்து சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் கிஷோரை சந்தித்து பேட்டி எடுப்பதுதான் கதை. பரபரப்பான அந்த கைதி சொல்லும் விஷயங்களும், அது இவர்களுக்குள்ளும், சமூகத்திற்குள்ளும் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் கதை. மூன்று நாட்களில் நடக்கும் கதை.
பாலை, பகல் போன்ற படங்களில் பணியாற்றிய வே.வெற்றிவேல் சந்திரசேகர் இயக்குகிறார். பிரபாதிஷ் சாமுவேல் தயாரிக்கிறார். வேத் சங்கர் இசை அமைத்துள்ளார், விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.