Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

தந்திரன்

தந்திரன்,
  • தந்திரன்
  • அரவிந்த்
  • ஸ்வேதா மேனன்
  • இயக்குனர்: கே.ஜே.போஸ்
19 மார், 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » தந்திரன்

ஸ்ரீ சரவணபவ மூவிஸ் பட நிறுவனம் சார்பில் விஜயலட்சுமி ராமமூர்த்தி தயாரிக்கும் படம் தந்திரன். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கே.ஜே.போஸ். வசனம் - ரதன் சந்திரசேகர். சென்னை -28 படத்தில் நடித்த அரவிந்த், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுவேதா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் சித்திக், ஐஸ்வர்யா, வினாயகம் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

பிரபல மலையாள மந்திரவாதியிடம், தனது காணாமல்போன சகோதரனை கண்டுபிடிக்க வழி கேட்கிறாள் கதாநாயகி. கதாநாயகியின் அழகில் மயங்கும் மந்திரவாதி, அவளை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துகிறான். காதலியை காணாமல் தேடும் காதலன், அந்த மந்திரவாதியிடமிருந்து தனது காதலியை எப்படி மீட்கிறான், காதலியின் சகோதரன் கதி என்ன ஆனது? என்பதுதான் படத்தின் கதை. அதை காதல், ஆக்ஷ்ன், மர்மம் கலந்த விறுவிறுப்பான திகில் படமாக உருவாக்கி வருகின்றனர்.

இப்படத்திற்கு கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ.தஷி இசையமைக்க, பாடல்களை தாணு கார்த்திக், விஜய் கிருஷ்ணா, அமிர்தா ராமலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் உள்ள காடுகளில் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in