இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. இதில் சுமார் 400 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
பிக்பாஸ் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் ஏற்கெனவே பணியாற்றுபவர்களையும் திரும்ப அழைத்து படப்பிடிப்பபை நிறுத்துவோம் என்று பெப்சி அறிவித்தது. இந்த பிரச்சினையை கையில் எடுத்த நடிகை குஷ்பு இதனை சுமூகமாக முடித்துள்ளார். இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரியான புரிதல் இல்லாததால் குழப்பமான சூழல் ஏற்பட்டது. முறையான தொடர்பு இல்லாததால் பிரச்சனை ஏற்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்த திரும்பிய குஷ்பு, பிரச்னை என்னவென்று கேட்டார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சிக்கும் இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை பின்பற்றினால் போதும் என்றோம். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பிரதிநிதியாக குஷ்பு சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் பிரச்னையை தீர்த்து வைத்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எத்தனை பேர் வேலை செய்ய வேண்டும், என்ன மாதிரியான வேலை செய்ய வேண்டும் என்று சுமூகமாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது என்று பெப்சி முடிவு செய்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இனி எந்த பிரச்சனையும் இன்றி நடக்கும். என்றார் ஆர்.கே. செல்வமணி.