இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ராஜ் தொலைக்காட்சி, தமிழ்நாட்டின் முக்கிய ஆளுமைகள் குறித்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முழுவதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. தற்போது முன்னாள் முதல்வரும், திரைப்பட நட்சத்திரமுமான ஜெயலலிதா பற்றி ஜெ ஜெ ஒரு சகாப்தம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு. அவரது திரையுலக சாதனைகள், அரசியலில் நுழைய அவர் கடந்து வந்த பாதைகள், அரசியலில் படைத்த சாதனை, முதல்வராக பணியாற்றியது ஆகியவற்றுடன் அவரது திரைப்பட பாடல் காட்சிகளும், முக்கிய வசன காட்சிகளும் ஒளிபரப்பாகிறது. ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், அவருடன் நடித்தவர்கள், அரசியலில் துணையாக இருந்தவர்கள் ஆகியோரது பேட்டியும் இடம்பெறுகிறது. இதுவரை வெளிவராத பல தகவல்கள் நிகழ்ச்சியில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.