மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி வெள்ளித்திரை. இது சினிமா பற்றிய நிகழ்ச்சி. திரைப்படங்களின் செய்திகள், திரையுலக ரகசியங்கள், ஒருவரி செய்தி, படத்துளி, நடிகர் நடிகைகளின் பேட்டிகள், பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு என பல பகுதிகளை கொண்டது. சித்ரா லட்சுமணன் தொகுத்து வழங்கிய அந்த நாள் ஞாபகம் பகுதி அனைவரையும் கவர்ந்த பகுதி. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
வருகிற 12ந் தேதி வெள்ளிக்கிழமை வெள்ளித்திரையின் ஆயிரமாவது எபிசோட் ஒளிபரப்பாகிறது. இதனை இயக்குனரும், பத்திரிகையாளருமான பாலன் இயக்குகிறார், எஸ்.வி.ரமணன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் டி.வி தயாரிக்கிறது. "ஆயிரம் எபிசோட்களும் கருவூலங்களுக்கு ஒப்பானது. அவற்றை பத்திரமாக வைத்திருக்கிறோம். பிற்காலத்தில் சினிமா பற்றி ஒரு தகவல் களஞ்சியமாக இந்த எபிசோட்கள் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர்., பற்றிய தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த திரையுலக கலைஞர்கள், நேயர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஜி.பாலன்.