மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
சந்தானம், சிவகார்த்திகேயனைப் போன்று சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் லொள்ளு சபா சாமிநாதன். அதே லொள்ளு சபாவில் இருந்து வந்தவர் என்பதால் சாமிநாதனுக்கு தனது படங்களில் அதிக வாய்ப்பளித்து வருகிறார் சந்தானம். இதற்கு முக்கிய காரணம் எப்போதுமே நகைச்சுவையாகவே பேசிக்கொண்டிருக்கும் சாமிநாதன், சாதாரண காமெடி காட்சிகளில்கூட நகைச்சுவையை வெளிப்படுத்தும் வகையில் நடித்து விடக்கூடியவராம்.
மேலும், காமெடி மட்டுமின்றி, சென்டிமென்ட் காட்சிகளிலும் அவர் சிறப்பாக நடிக்கக்கூடியவர் என்பதால், சில படங்களில் குணசித்ர வேடங்களுக்கும் சாமிநாதனை பயன்படுத்தி வருகிறார்கள். அதோடு, சிலரைப்போன்று சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற பாரபட்சமெல்லாம் அவர் பார்ப்பதில்லையாம். குறிப்பாக, சின்ன பட்ஜெட் படங்கள் என்றால் அனுசரணையாக நடந்து கொள்கிறாராம் சாமிநாதன்.