'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் சுமார் 60 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது. தற்போது புதிதாக வேந்தர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பை செய்து வந்த வேந்தர் தொலைக்காட்சி.நேற்று (ஆகஸ்ட் 24) முதல் முறைப்படியான ஒளிபரப்பை துவங்கியுள்ளது. எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்து வரும் மற்றுமொரு தொலைக்காட்சி இது.
இதுகுறித்து வேந்தர் தொலைக்காட்சி தலைவரும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வேந்தருமான பாரிவேந்தர் கூறியதாவது: வேந்தர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, ஆண் பெண் இருபாலரும் ரசிக்கத் தக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மரபு, நெறிகளுக்கு மதிப்பளித்து முழு குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளோம்.
இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், குவைத், மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலும் வேந்தர் தொலைக்காட்சியை காணலாம். எல்லா கேபிள் நெட் ஒர்க் மூலமாகவும், டிடிஎச் மூலமாகவும் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்றார்.
வேந்தர் தொலைக்காட்சியில் வேந்தர் வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு திருமணம் நடத்த 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் என்ற நிகழ்ச்சியை நடிகை குஷ்பு நடத்துகிறார்.