'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
ஐ.பி.எல்.,லைப் பார்த்து திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கிய சி.சி.எல்., என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 2010-ஆம் வருடம் தொடங்கப்பட்ட சிசிஎல் தற்போது வெற்றிகரமாக 5 ஆவது சீசனை நிறைவு செய்திருக்கிறது. தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தித் திரையுலகினர் மட்டுமே விளையாடிய சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் தற்போது மராத்தி, போஜ்பூரி மொழியைச் சேர்ந்த திரைப்படத்துறையினரும் இணைந்து விளையாடி வருகின்றனர். அது மட்டுமல்ல, இந்த விளையாட்டுப்போட்டியை பல்வேறு சேனல்கள் லைவ்வாக ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்ததும், ஐபிஎல் போலவே சிசிஎல்லுக்கும் ரசிகர்கள் கூட்டம் கணிசமான அளவுக்குஅதிகரித்துவிட்டது.
இதை எல்லாம் பார்த்ததும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் கிரிக்கெட் விளையாட ஆசை வந்திருக்கிறது. எனவே சின்னத்திரை நட்சத்திரங்களில் யார் யாருக்கு எல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது என்று கேட்டு பட்டியல் தயாரித்து வருகின்றனர். அணி தயாரான பிறகு, தெலுங்கு, மலையாள, கன்னட, ஹிந்தி சின்னத்திரை கலைஞர்களுடன் கலந்து பேசி சின்னத்திரை கிரிக்கெட் போட்டியை தொடங்க இருக்கின்றனர்.