மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே தொடர் திடீரென முடிவுக்கு வந்தது. தான் ஹீரோயினாக நடித்து வந்த தொடர் பாதியிலேயே முடிவுக்கு வந்துவிட்டதால் ரேஷ்மா முரளிதரன் மிகவும் விரக்தியுடன் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து நாயகன் ஜெய் ஆகாஷ் 'நான் இல்லாததால் கதை விறுவிறுப்பாக செல்லவில்லை. எனக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைக்கவும் சீரியல் குழுவினர் ஒத்துக் கொள்ளாததால் சீரியலை பாதியிலேயே முடித்து வைக்கும் கட்டாயம் ஏற்பட்டது' என்று கூறியிருந்தார்.
இதனை பார்த்த ரேஷ்மாவின் ரசிகர்கள் 'நீங்கள் இல்லாததால் சீரியல் இண்ட்ரஸ்டிங்கா இல்லை என்று யார் சொன்னது? ரொம்ப ஓவரா தற்பெருமை பேசாதீங்க' என்று பதிலடி கொடுத்தனர். பதிலுக்கு ஜெய் ஆகாஷ் ரசிகர்களும் ரேஷ்மாவை திட்டியும் அவரது ரசிகர்களிடம் சண்டையிட்டும் வருகின்றனர்.
ஒருகட்டத்தில் மிகவும் கடுப்பான ரேஷ்மா, 'உங்களுக்கு நடந்த உண்மை தெரியவில்லை என்றால் தயவு செய்து தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். இந்த தொடர் எதற்காக முடிவுக்கு வந்தது என்பதை இதில் பணியாற்றிய அனைவரும் அறிவர். இதில் என்னுடைய தவறோ, எங்கள் டீமின் தவறோ எதுவுமில்லை. என்னையும் எனது பேன் பேஜ்களையும் அட்டாக் செய்வதால் உண்மை மாறப்போவதில்லை. நீங்கள் உங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக இருங்கள் ஆனால், விஷமத்தை பரப்பாதீர்கள்' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.