பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிக்பாஸ் சீசன் 8-ல், முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சவுந்தர்யாவுக்கு 2வது இடம் கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
ரவீந்தர், தீபக், ஜாக்குலின், சவுந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா, வி.ஜே.விஷால், ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா, சஞ்சனா, அக்ஷிதா, அர்னவ், சத்யா, ரயான் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.
வாரம் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்தில், முத்துக்குமரன், ஜாக்குலின், பவித்ரா, வி.ஜே.விஷால், சவுந்தர்யா, ரயான் ஆகியோர் இருந்தனர். இதில் பணப்பெட்டி டாஸ்க்கில், ஜாக்குலின் வெளியேறினார்.
‛கிராண்ட் பினாலே' நேற்று(ஜன.,19) நடைபெற்ற நிலையில், இதில், முதலில் ரயானும், பின் பவித்ராவும் வெளியேற்றப்பட்டனர். 3வது இடத்தை வி.ஜே.விஷால் பிடித்தார். மக்களின் பெரும் ஆதரவோடு, முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சவுந்தர்யா ‛ரன்னர் அப்'பாக தேர்வு செய்யப்பட்டு, 2வது இடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற முத்துக்குமரனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி டிராபியை வழங்கினார். டிராபியுடன், 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் அவருக்கு வழங்கப்பட்டது.