ராஜபார்ட் ரங்கதுரை, வாலி, காஞ்சனா 3 - ஞாயிறு திரைப்படங்கள் | படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் |
பிரபல சீரியல் நடிகை ஷாலினி ஜீ தமிழில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'சூப்பர் மாம்' உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். சில வருடங்களுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்ததை போட்டோஷூட் வெளியிட்டு கொண்டாடிய ஷாலினி, சிங்கிளாக சுதந்திரமாக இருப்பதை பெரிதும் விரும்புவதாக பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
ஆனால், சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தனக்காகவும், தன் குழந்தைக்காகவும் நிச்சயம் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது சிங்கிளாக இருப்பது தனிப்பட்ட முறையிலும், அலுவல் ரீதியிலும் சோர்வடைய செய்வதாக பதிவிட்டுள்ளார்.