சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் என்ற படத்தில் அறிமுகமானார் . அந்த முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதையடுத்து தென் இந்திய சினிமாவிலும் அவர் பிரபலமாகிவிட்டார். சீதாராமம் படத்தில் வில்லனாக நடித்த சுமந்த் என்ற நடிகரை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்த சுமந்த், தனுஷ் நடித்த வாத்தி படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சுமந்த் 2004ல் நடிகை கீர்த்தி ரெட்டி என்பவரை காதலித்து, திருமணம் செய்தார். 2006ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது அவருக்கும், மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது மிருணாள் சொன்னால் தான் தெரியவரும்.