அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள் | விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம் | அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில் | இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல் | பொங்கலுக்கு இத்தனை பான் இந்தியா படங்கள்? தாங்குமா தியேட்டர்கள் ? | வார்த்தை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா ஆப்தே! | தெலுங்கில் டப் செய்யப்படும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? | திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! |

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்திற்கான காரணம் தெரியாவிட்டாலும், சாய்ரா பானு பெரும் மனவேதனையில் இந்த முடிவை எடுத்திருப்பதும், ஏ.ஆர்.ரஹ்மான் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதையும் அவர்களது பதிவுகள் காட்டுகிறது.
இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோல்கட்டாவை சேர்ந்தவர் மோகினி டே, 28. கிடார் கலைஞரான இவர், 10 வயது முதல் கிடார் வாசித்து வருகிறார். இவர் ஜாகிர் உசேன், கியுன்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களுடன், இணைந்து பணியாற்றி உள்ளார். இசையமைப்பார், ஆல்பம் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டவர். பல ஆண்டுகளாக ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வருகிறார். ரஹ்மானுக்கு பிடித்த இசை கலைஞர்களில் இவரும் ஒருவர்.
அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'நானும், மார்க்கும், பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும், தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது' என, தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கோச்சடையான் படத்தில், மோகினி டே இணைந்து பணியாற்றி உள்ளார். அடுத்தடுத்த இந்த விவாகரத்துகளால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சனங்களும் புதிய புதிய கதைகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.




