வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் த்ரிஷா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடன் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய படங்களிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஷ்வம்பரா' படத்திலும் நடித்து வருகிறார்.
விஷ்வம்பரா படத்திற்காக சிரஞ்சீவியுடன் ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் சென்றார் த்ரிஷா. தனது ஜப்பான் பயணத்தைப் பற்றி, “உன்னை கடைசியாகப் பார்த்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போது நேசித்தபடியே, இப்போதும் நேசிக்கிறேன். ஜப்பான்… உண்மையில் ஒரு 'வைப்' ” எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஜப்பான் நாட்டு உடையுடன் புகைப்படத்தையும், தான் தங்கியுள்ள இடத்திலிருந்து ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
'96' படம் தந்த திருப்புமுனையால் மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.