பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
1941ல் தயாராகி 1942ல் வெளியான தெலுங்கு படம் 'பாலநாகம்மா'. இதில் என்.டி.ராமராவ், அஞ்சலி தேவி நடித்திருந்தார்கள். இதே படத்தை 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். இதனை சங்கர் இயக்கினார். மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படம்.
சரத்பாபு நாயகனாக நடித்திருந்தார். ஸ்ரீதேவி பால நாகம்மாவாக நடித்திருந்தார், கே.ஆர்.விஜயா நாகதேவியாக நடித்திருந்தார். இவர்கள் தவிர அசோகன், மஞ்சுபார்கவி, வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் வெளிவந்த பிறகு கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக படத்தின் காமெடி காட்சிகள் விரசமாக இருப்பதாகவும், இளையராஜாவின் மேற்கத்திய பின்னணி இசை கதைக்கு பொருந்தவில்லை என்றும், சரத்பாவுவின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் ஸ்ரீதேவியின் அழகும், நடிப்பும், நடனமும் கொண்டாடப்பட்டது.
படத்தின் பின்னணி இசை விமர்சிக்கப்பட்டாலும் பாடல்கள் ஹிட்டானது. குறிப்பாக 'பிலஹரி' ராகத்தில் அமைந்த 'கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுந்தாளோ கவி எழுத...' என்ற பாடல் இன்றைக்கும் ரசிக்கப்பட்டு வருகிறது.