அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வீஜே மணிமேகலை விலகியிருப்பது சின்னத்திரையில் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பிரியங்காவுக்கு எதிரான அவரது பதிவை பல பிரபலங்கள் ஆதரித்த நிலையில், ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு பல விதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அதில், சிலர் பிரியங்காவால் பாதிகப்பட்டவர் மணிமேகலை மட்டும் இல்லையென்றும் முன்னதாக ஜாக்குலின், பாவனா போன்றவர்கள் கூட பிரியங்காவால் தான் விஜய் டிவியை விட்டு விலகினார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பாவனாவே ஒரு முறை பதிவிட்டுள்ளதாக சில தகவல்களை பகிர, அதை பார்த்த பாவனா, 'நான் அப்படி எதுவும் கூறவில்லை. அப்படி நான் பேசியதாக சொன்ன வீடியோவை காட்டுங்கள். நான் சூப்பர் சிங்கரை விட்டு வெளியேற காரணம், எல்லையை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதற்காகவும், மும்பையில் எனது கணவருடனேயே சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவும் மட்டும் தான்' என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.