மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஆல்பம். நம் வீட்டு ஆல்பத்தில் உள்ள போட்டோக்களை பார்க்கிறபோது அந்தந்த காலகட்டங்கள் நினைவில் வந்து மோதும். அப்போது நடந்த பசுமையான நினைவுகள் மனதில் எட்டிப்பார்க்கும். அதை பகிர்ந்துகொள்ளும்போது அளவில்லாத மகிழ்ச்சி கிடைக்கும். இதேபோல் பிரபலங்கள் தம்முடைய ஆல்பத்தையும் அதன் பின்னணியையும் கூறும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். மேலும், இந்நிகழ்ச்சியில் பிரபலங்களை நெகிழ்ச்சியூட்டும் வகையில் அவர்கள் சந்தித்த, மறக்க முடியாத நபர் ஒருவர் நிகழ்ச்சியில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் கலந்து கொள்வது தனிச் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை பெப்சி உமா தொகுத்து வழங்குகிறார்.